அம்பல மாடும் குரைகழல் பாதன் -- அன்பரை ஆட்கொளும் மெய்யன் ஐயன்
வெம்புலி தோலுடை யாக-- விண்ணதி கொன்றையை சூடும்
சம்புவி .னஞ்சக் கரமுரைப் பாரைத்-- தாங்கிடு வான்பதி வண்டு மொய்க்கும்வெம்புலி தோலுடை யாக-- விண்ணதி கொன்றையை சூடும்
பைம்பொழில் சூழ்ந்தழ காரும் .. பாம்பணி நன்னகர் தானே....4
உச்சியில் வெண்மதிக் கண்ணியைச் சூடும்-- ஒப்பிலி யானவன் செய்யன் ஐயன்
நச்சை அமுதாய் உண்ட-- நம்பன் அடியவர் அன்பன்
பச்சை நிறத்துமை யாளவள் காந்தன் --பற்றிடு வார்க்குறு தாள ளிக்கும்
பச்ச முடைப்பரன் எந்தை -- பாம்பணி எம்பெரு மானே....5
வெயிலினில் வீசுமென் மாருதம் போல -- வெவ்வினைத் துன்பதை தீர்க்கும் அன்பில்
அயிலுடை சூலம் ஏந்தி--அன்பர்க் கருள்செயும் வள்ளல்
மயிலன சாயல் எழிலுமை பங்கன் -- மானுடை கையன் ஊர தென்பார்
பயிர்வளர் செய்புடை சூழும் -- பாம்பணி எம்பெரு மானே....6
6 comments:
வணக்கம்!
யாப்பிலக்கணத்தைக் குறித்து தங்களிடம் பேச வேண்டும்
தொலைபேசி எண்கள்
அல்லது
மின்னஞ்சல்
அறிய தரவும்
kambane2007@yahoo.fr
தீபாவளி வாழ்த்துக்கள்
subbu rathinam
www.vazhvuneri.blogspot.com
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
அன்பு மாதேவி
மிக்கநன்றிம்மா.
திரு.கி.பாரதிதாசன் கவிஞர் அவர்களுக்கு,
கைபேசி என்னிடம் இல்லை.
மடல்களில் பேசலாமே.
சந்தவசந்தம் என்னும் குழுவில் பெரியோர் பலர்
யாப்பிலக்கணம் அறிந்தவர் உளர்.
நீங்களும் அங்குவந்து பார்க்கலாம்.
அன்புடன்,
தங்கமணி.
திரு.சுப்புரத்தினம் அவர்களுக்கு,
தீபாவளிநல் வாழ்த்துக்கு நன்றி.
நீங்களும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக்
கொண்டாடியிருப்பீர்கள்.வாழ்த்துகள்.
(தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்)
Post a Comment