Thursday, December 6, 2012

திருக்கானூர் -- 5

 பொன்றும் காலம் வந்திடுமுன்
....புனிதன் தாளே கதியென்று
ஒன்றும் சித்தம் கொண்டன்பில்
....ஓதி உய்ய அடைநெஞ்சே
கன்றின் தாயாய்ப் பேணுபவன்
....கனிவாய் அருட்கண்  பார்த்திடுவான்
கொன்றை சூடி உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....9

ஆண வமெனும் மாசுதனை
....அகற்றி உய்வை அடைநெஞ்சே
வீண  டைவதோ இப்பிறவி
....விருதாய் மூப்பில் வருந்துவதென்
காணக் கண்செய் தவமாகக்
....கருணை தவழும் நுதல்விழியன்
கோணற் பிறையன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....10

1 comment:

MyTiruvarur.com said...

அருமை!!!

திருவாரூர், உலகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆரோக்கியம் மற்றும் சமயல் தொடர்பான செய்திகளுக்கு
VISIT: திருவாரூர் செய்திகள்