Showing posts with label கடவூர். Show all posts
Showing posts with label கடவூர். Show all posts

Monday, June 21, 2010

கடவூர் அடைநெஞ்சே!--5


புரியா மயலாம் மயக்கங்கள்
இரியக் கருதில் அடைநெஞ்சே!
கரிகா டுடையான் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே....9

கரிகாடு =சுடுகாடு

கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருமின் அருள்தங்கும்
கவசத் தலமாம் கடவூரே!....10

அவசம்=வசமின்மை, பரவசம்

Saturday, June 19, 2010

கடவூர் அடை நெஞ்சே!--4



புணையாய் வருமே புகல்நெஞ்சே!
துணையா ருமிலா தவந்திக்குப்
பிணையா ளெனவே அருள்செய்யக்
கணைதொட் டவனூர் கடவூரே....7

கணை=மண்வெட்டி.


நிரலாய் வினைசெய் துயர்சொல்லத்
தரமன் றெனநீ அடைநெஞ்சே!
அரனார் அவுணன் விறல்தீர்த்து
கரவாள் தருவார் கடவூரே....8

Tuesday, June 15, 2010

கடவூர் அடைநெஞ்சே!-- 2


கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா யுலையா(து) அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அருள்செய்த
கருமா உரியான் கடவூரே.... 3

உலை=அலைதல்.

தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்
கலையா மனமாய் மணதூபக்
கலயர் பணிசெய் கடவூரே....4

அலம்=துன்பம்

Sunday, March 7, 2010

வண்ணப் பாடல்!

'தனதானத்..தனதான'

விடையேறிக்..கனிவோடு
...வினையோடப்..புரிவாயே!
சடையோடுப்..பொலிவாகும்
...தவமோனக்..குருநாதா!
மடைவாளைப்..பயிரோடும்
...வளமானத்..திருவூரா!
கடையேனுக்..கருளாயோ
...கடவூரில்..பெருமானே!